ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (18:49 IST)

ஏகாதேசி விரதம் இருப்பது எப்படி? சில வழிமுறைகள்..!

வைகுண்ட ஏகாதேசி உள்பட ஏகாதேசி விரதம் இருப்பது பலரது வழக்கமாக இருக்கும் நிலையில் இந்த விரதத்தை  முறையாக இருப்பது எப்படி என்பதை பார்ப்போம்,
 
 ஏகாதசிக்கு முதல் நாளான தசமி தினத்தன்று ஒருவேளை மட்டும் உணவருந்தி, ஏகாதேசி தினத்தில் முழுவதுமாக உணவருந்தாமல் இருப்பது தான் ஏகாதேசி விரதம். ஏகாதேசிக்கு மறுநாளும் முழுவதுமாக உணவருந்த கூடாது. அதற்கு அடுத்த நாள் துவாதசி அன்று தான்  உணவருந்த வேண்டும். 
 
மேலும் ஏகாதேசி தினத்தில் கதை பேசக்கூடாது என்பதும் திருமால் அவதார பெருமைகளை பற்றி சொல்லும் நூல்களையோ திரைப்படங்களை பார்க்கலாம் என்பதும் விஷ்ணுவை பூஜைப்பதில் பெரும் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் குறிப்பாக ஏகாதேசி நாளில் இரவில் தூங்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. 
 
வைகுண்ட ஏகாதேசி என்று இரவு கண்விழித்து  விரதம் இருப்பதால்  பெரும் பலன் ஏற்படும் என்று பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran