ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (23:51 IST)

இறை வழிபாட்டின்போது மணி அடிப்பதற்கான காரணம்

இறைவழிபாட்டின்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட காரணம் உண்டு. பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. 
 
பித்தளை மணி என சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம்,  மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால் எழும் அதிர்வலையானது சுமார் ஏழு  நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும்.
 
 
பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.  மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி,  மூளையின் இடது, வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்யும். மூளையின் இருபக்கமும் சரிசமமாய்  வேலை செய்யும்போது மனது அலைப்பாயாமல் ஒருநிலைப்படும். மனநிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.
 
பூஜையின்போது ஒலிக்கவிடும் மணியானது மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என சொல்லப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம்,  விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரத்தினை சீர்ப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல், பூஜையின்போது மணி அடித்தால் அந்த ஓசைக்கு வீட்டிலிருக்கும் துஷ்டதேவதைகள் வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடும்.