1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்பட சில எளிய குறிப்புகள் !!

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம்  வரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
 
பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில்  விடவும் பணப்பிரச்சனை தீரும்.
 
தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும்  தரித்திரம் விலகும்.
 
தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
 
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது. குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில்  கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள். மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.