ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (15:30 IST)

தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் பெருமாள் கோவில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?

பொதுவாக வைகுண்ட ஏகாதேசி தினத்தில் மட்டும் தான் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதும் இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும் சொர்க்கவாசலை பயன்படுத்தி வெளியே வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

 
இதன் காரணமாக தான் இந்த தலத்திற்கு நித்திய சொர்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயர் உண்டு.  இந்த தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பார்
 
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினங்களில் இங்கே பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு  திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran