வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (14:17 IST)

வளர்பிறை சதுர்த்தி வழிபாட்டின் சிறப்புக்களும் பலன்களும் !!

Valarpirai Chathurthi
விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பானது. சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.


விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. அதாவது இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை - விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் - பூத வடிவமாகும். புருவம், கண்கள் - மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் - தேவ வடிவமாகும்.

சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். சதுர்த்தி அன்று மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல் மாலையையோ அல்லது வெள்ளெருக்கு மாலையையோ அவருக்கு சாற்றி வழிபடுவது மிகுந்த பலன்களை தந்தருளும்.

விநாயகப்பெருமானுக்கு சுண்டல், பாயசம், சர்க்கரைப் பொங்கல் அல்லது கொழுக்கட்டை என நெய்வேத்தியம் செய்து அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கு வழங்குங்கள்.

ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும். இவ்வாறு விரதம் இருப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.