ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!
திண்டுக்கல் அருகே பிரபல ரவுடியை காவல்துறை அதிகாரிகள் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முகமது இர்பான் என்பவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக, பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.
இந்த வழக்கில் கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அந்த சூட்டில் ரிச்சர்ட் சச்சின் காலில் குண்டு பாய்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அவரை அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, காயமடைந்த ரவுடி சச்சின் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
Edited by Siva