செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (19:04 IST)

24 மணி நேரமும் எரியும் விளக்கு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் சிறப்பு..!

Vinayagar
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 16 திரியில் கொண்ட விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் தகவல் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை மற்றும் சிவகங்கை அருகே இருக்கும் பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ள கற்பக விநாயகர் உலக புகழ் பெற்றது என்பதும் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கற்பக விநாயகருக்கு முன்பு 16 திரிகளைக் கொண்ட விளக்குகள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதை பக்தர்கள் காணலாம். 16 வகையான பேறுகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த திரிகள் எரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் ஆங்கில புத்தாண்டு தமிழ் புத்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களில் பக்தர்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran