திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தெப்ப உற்சவம்: திரண்ட பக்தர்கள்..!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று மஞ்சள் நீராட்டு விழா விசேஷமாக நடந்தது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். இன்று அதிகாலை ஐந்து மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் ஆறு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இதனை அடுத்து மாலை நான்கு முப்பது மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்ற நிலையில் சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளில் உலா வந்தார். அதன்பின் தீபாராதனைக்குப்பின் 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவுபெற்றது.
Edited by Mahendran