1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2025 (18:59 IST)

நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் விலகும்.. ஆன்மீகவாதிகள் தகவல்..!

நெற்றியில் குங்குமம் வைப்பது என்பது இந்திய கலாச்சாரங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் நெற்றியில் 48 நாட்கள் தொடர்ச்சியாக குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
திருமணம் ஆன, திருமணம் ஆகாத பெண்கள் தினசரி காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்றும் இரண்டு புருவத்திற்கு நடுவே சரியாக குங்குமம் வைத்தால் உடம்பில் ஊடுருவக்கூடிய கெட்ட சக்தியானது தடுக்கப்படும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உடல் மனம்  விஷயங்களில் பலதரப்பட்ட நன்மைகளை குங்குமம் அளிக்கும் என்றும் உச்சி முகட்டில் குங்குமம் வைத்தால் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
மேலும் மனதை ஒருமுகப்படுத்தவும் இயற்கையான ஆற்றலை அதிகரிக்கவும் குங்குமம் உதவும் என்றும் குங்குமத்தில் மஞ்சள் சுண்ணாம்பு மற்றும் பாதரச சல்பேட் ஆகிய இயற்கை பொருட்கள் இருப்பதால் நாம் மனதை அமைதி படுத்த உதவும் என்றும் குங்குமம் இடுவதால் மனக்கஷ்டம் உள்பட அனைத்து கஷ்டங்களும் தீரும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran