செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (17:23 IST)

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கோலாகலம்..! பக்தர்களுக்கு அருள் பாலித்த உற்சவர்..!!

kovil
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி, விபசித்து முனிவர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், சாமி வீதி உலாவும் நடைபெறும்.
 
இந்நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் 6ம் நாள் ஐதீக திருவிழா நடைபெற்றது. 
 
temple
இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள, விபசித்து முனிவர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். 

 
பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டபட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், உற்சவ மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.