1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. manali ayya purattasi function starts today

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

அய்யா
மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி  மிகவும் பிரசித்தி பெற்ற நிலையில் இங்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் புரட்டாசி திருவிழா கொண்டாடப்படும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. அய்யா பக்தர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட கொடியை கையில் ஏந்தியவாறு ஹர ஹர சிவா என்ற நாமத்தை உச்சரித்தவாறு கொடி மரத்தை சுற்றி வந்தனர்.

இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் திருநாம கொடி ஏற்றப்பட்டதை அடுத்து இரவில் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருட வாகனம் உட்பட  10 வாகனங்களில் அய்யா வலம் வருவார்.

இந்த விழாவின் எட்டாவது நாளில் சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் வரும் 15ஆம் தேதி  திருத்தேர் விழா நடைபெறும் என்றும் அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (06-10-2023)!