வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (18:25 IST)

பயம் விலகி நீண்ட ஆயுள் வேண்டுமா? கேரளாவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!

கேரளாவில் உள்ள மகாவிஷ்ணு கோயிலுக்கு சென்றால் பயம் விலகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் அடுவச்சேரி என்ற பகுதியில் அமைந்துள்ளது வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோயில். இங்கு அட்சய திருதை தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தோற்றத்தில் மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி காட்சி தருவார்கள்.
 
மிகவும் சிறப்பு மிக்க இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் பயம் விலகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் மாங்கல்ய பலன், குழந்தை பேறு, விவசாயம் மற்றும் வணிகத்தில் லாபம் ஆகிய பயன்களும் இந்த கோவிலுக்கு சென்று வருவதால் கிடைக்கும். 
 
இங்கு வரும் பக்தர்கள் பட்டு துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கி கோவில் சன்னதியில் சமர்ப்பித்து வழிபட்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran