1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (18:24 IST)

ஆயக்குடி பாலசுப்பிரமணியசுவாமியை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும்..!

குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் ஆயக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவன் சக்தி சூரியன் விஷ்ணு விநாயகர் இன ஐந்து இறை சக்தி இந்த கோவிலில் இருப்பதாகவும் இந்த கோயிலில் உள்ள அரசமரம் வேப்பமரம் ஆகியவற்றை சுற்றி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது என்றும் கூறப்படுகிறது. முற்காலத்தில் மல்லபுரம் என்ற குளத்தை தூர் வாரிய போதுதான் பாலசுப்பிரமணி சுவாமியின் திருவுருவம் கண்டறிக்கப்பட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது
 
Edited by Mahendran