கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்புத்தூரில் பழமையான அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது கோவில் திருப்பணிகள் முடிவடைந்து பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது.
அன்று இரவு முதற்காலை யாக சாலை பூஜை தீபாராதனை நடைபெற்று பிப்ரவரி 19 காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை, பிப்ரவரி 20ஆம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
பிப்ரவரி 21ம் தேதி காலை 6 மணிக்கு 6ஆம் கால யாக சாலை பூஜை மற்றும் கோ பூஜை கடம் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையை வளம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.