1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (18:18 IST)

12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைபிடித்தால் அடுத்த பிறவி இல்லை..!

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை என்று நம்பப்படுகிறது. 
 
கார்த்திகை தினத்தன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் குளித்து முடித்து பானம் அருந்தி விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
 
 இவ்வாறு ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விரதம் இருக்க வேண்டும், 12 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அடுத்த பிறவி இருக்காது என்றும் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்றும் ஐதீகமாக கூறப்படுகிறது.  
 
விரதம் இருப்பது என்பது நமது துன்பங்களை போக்கும் என்றும் முற்பிறவியில் செய்த தீவினைகள் களையும் என்றும் நம்பப்படுகிறது
 
Edited by Mahendran