தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்
- தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!
- தீபாவளிக்கு பூமிக்கு வரும் புது விருந்தினர்கள்! வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண்கற்கள்! - எங்கே? எப்போது?
- அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!
- தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில், பேருந்து குறித்த முக்கிய தகவல்..!
செல்வம் செழிக்க... தீபாவளி லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?
தீபாவளி பண்டிகையின்போது சகல ஐஸ்வரியங்களையும் அருளும் குபேர லட்சுமி வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
தீபாவளிக்கு முதல் நாளே ஏற்பாடுகளை செய்துவிட்டு, தீபாவளி அதிகாலையில் 'கங்கா நீராடல்' செய்த பின் பூஜையை தொடங்க வேண்டும்.
பூஜை அறையில் குபேர லட்சுமி படம் வைத்து, தலை வாழை இலையில் நவதானியங்களை பரப்ப வேண்டும். நடுவில் நீர் நிரப்பிய சொம்பை வைத்து, மாவிலை கொத்து செருகிய மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து கலசம் நிறுவ வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள், பணம் மற்றும் சில்லறை நாணயங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
மகாலட்சுமி ஸ்தோத்திர பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியை சொல்லியோ அல்லது "ஓம் குபேராய நமஹ..." என்று மந்திரம் உச்சரித்தோ பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடிந்ததும், வாழைப்பழம், பாயாசம் போன்றவற்றை நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
Edited by Mahendran
