1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Mamita baiju confident about dude will be enjoyed by Fans

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

லவ் டுடே
இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  பிரேமலு படத்தின் வெற்றியால் மமிதா பைஜு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளார். இதனால் ட்யூட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் ‘ட்யூட்’ படம் பற்றி பேசியுள்ள மமிதா “ட்யூட் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உற்சாகமவும் வேடிக்கையாகவும் இருக்கும். தீபாவளிப் பண்டிகைக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். மக்கள் கண்டிப்பாக இதை தியேட்டரில் ரசிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!