திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:40 IST)

திருவண்ணாமலையில் கிரிவலம்: லட்சக்கணக்கில் கலந்து கொண்ட பக்தர்கள்!

Girivalam
இந்த மாதத்துக்கான பௌர்ணமி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். 
 
நேற்று மாலை 4.44 மணிக்கு பவுர்ணமி தொடங்கிய நிலையில் மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர் 
 
இடையே மழை பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது 
 
கிரிவலம் சென்ற மக்கள் அதன் பின்னர் அருணாசலேஸ்வரர் கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு உணவும் ஆங்காங்கே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran