திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (20:19 IST)

சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!

annabhishegam1
சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!
சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து பக்தர்கள் திரண்டு வந்தனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது
 
தஞ்சை பெரிய கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இன்றைய பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது 
 
அதன்படி சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் அன்னாபிஷேகம் நடந்தது. இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்
 
Edited by Siva