வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

இறுதிச் சடங்கு முடித்தவுடன் குளிக்க வேண்டும் என கூறுவது ஏன்?

மனிதனின் உயிர் பிரிந்த பிறகு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்படுகிறது அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று கூறுவர்.

 
இந்து சமயத்தில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் ஈமச் சடங்குகள் சாதிகள் வாரியாக வித்தியாசமாக நடத்தப்படுகிறது. இச்சடங்குகள் இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என்றும் வழங்கப்படுகின்றன. 
 
ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல் பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்தைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.
 
ஒருவர் இறந்த பிறகு அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பாக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு, பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.