செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (12:24 IST)

கோவில் தெப்பத்தில் வலம் வந்த துர்கா ஸ்டாலின்.! மனமுருக வழிபாடு.!!

Durga Stalin
சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தெப்போற்சவத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று தெப்பத்தில் ஏறி வலம் வந்து வழிபாடு செய்தார்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலம்) கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் அகோர மூர்த்தி உள்ளிட்ட 3 மூர்த்திகளாக காட்சி தரும் இத்தளத்தில் மூன்று தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. 
 
நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் இந்திர பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 ஆம்  நாள் திருவிழாவான தெப்போற்ச்சவம் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கோவிலை வலம் வந்து தீர்த்த குளம் தெப்பத்தில் எழுந்தருளினர். இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தெப்பத்தில் ஏறி குளத்தில் வலம் வந்து சுவாமி அம்பாளை மனமுருக வேண்டி வழிபட்டார்.

 
இவ்விழாவில் திருவெண்காடு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.