1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Do you know why Pradosham period is said to be the best...?

பிரதோஷக்காலம் ஏன் சிறந்ததாக கூறப்படுகிறது தெரியுமா...?

Pradosham
பிறப்பிறப்பில்லா பெருவாழ்வுக்கு அசுரர்கள், தேவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள். அதற்குத் தேவை அமிர்தம். அதைப் பெற, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்படிக் கடைந்தபோது வாசுகி விஷத்தைக்கக்க, பாற்கடலிலும் ஒருவகை விஷம் தோன்றியது. இரண்டும் கலந்து ஆலகால விஷமானது.


அதன் கடுமை தாங்கமுடியாமல் தேவர்கள் கயிலாய மலைக்கு ஓடினார்கள். எம்பெருமான் ஈசன், தேவர்களை ஆற்றுப்படுத்தினார். தன் பிரியத்துக்கு உரிய தொண்ட ரான சுந்தரரை அழைத்து, ஆலகாலத்தை திரட்டி எடுத்துவரச் சொன்னார்.

சுந்தரரும் அத்தனை விஷத்தையும் ஒரு நாவற்பழம் போலத் திரட்டி, பாத்திரத்தில் வைத்து எடுத்து வந்தார். ஈசன் அதை வாங் கினார். ஆலகாலத்திலிருந்து  தேவ ர்களைக் காப்பதற்காக, அதை அப்படியே விழுங்கினார்.

விஷம் ஈசனுக்கு ஏதாவது துன்பம் விளைவித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அன்னை பார்வதி, ஈசனின் தொண்டையைப்  பிடித்தார். ஆலகாலம், ஈசனின் உள்ளே இறங்காமல், கண்டத்திலேயே தங்கிவிட்டது. விஷம் உண்ட அயர்ச்சியில் அப்படியே படுத்துவிட்டார் இறைவன்.

பார்வதியும் தேவர்களும் பதைபதைத்துப் போனார்கள். ஈசன் தன் திருவிளையாடலைத்  தொடர்ந்தார். களைப்பு நீங்கி எழுந் தார். டமருகம் ஒலிக்க, சூலாயுதத்தைச் சுழற்றி ஆடத் தொடங்கினார்.  தேவர்கள் மட்டுமல்லாது, உலகின் அனைத்து ஜீவராசிகளும் காணத் துடிக்கும் அற்புதத் தாண்டவம் அது.

இறைவனின் தாண்டவம் பலவிதம், ஊழிக்காலம் முடியும்போது நடைபெறும் ஊழிக்கூத்து; அந்தி நேரத்தில் ஆடும் ஆட்டம் என எத்தனையோ வகை. ஈசனின் தாண்டவம் என்பது சூட்சுமமானது. அதை நுட்பமாக உணரத்தான் முடியும். சூட்சுமமாக நிகழும் ஆண்டவனின் இந்தக் கூத்தை தரிசித்து பலன்பெறவே பிரதோஷ வழிபாடும் பூஜைகளும் செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சாய்பாபாவின் 108 நாமாவளி மந்திரம் !!