1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:54 IST)

பயன்தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள் !!

Vastu Shastra
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டின் அறைகள் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டும். உங்கள் அறைகள் காற்றோட்டமாகவும், சுத்தமாகவும், பிரகாசமாகவும், நன்கு பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.


எல்லா அறைகளின் மூலைகளும் கூட முடிந்தவரை பிரகாசமாக இருக்க வேண்டும். வீட்டில் தூசி, ஒட்டடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உபயோகப்படுத்தாத அல்லது ரிப்பேர் ஆன மின்சாதனங்கள் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அப்புறப்படுத்த வேண்டும்.

உடைந்த நாற்காலிகள் வைத்து கொள்ள கூடாது. பழைய துணிகளை வைத்திருக்க கூடாது. பழைய செய்திதாள்கள், பழைய பேப்பர்கள் போன்றவற்றை எடைக்கு போட்டு விடவேண்டும். தேவை இல்லாத இரும்பு சாமான்களை வைத்து இருக்கக்கூடாது.

உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை அகற்றிவிடவும். ஓடாத கடிகாரங்களை அகற்றி விடுங்கள். குடிநீர் குழாயோ, தொட்டியோ கசியாது பார்த்து கொள்ளவும். ஈசான்ய பகுதியை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். செருப்பு போன்றவற்றை அங்கு வைக்க வேண்டாம்.

காலண்டர், தெய்வ படங்களை தெற்கு நோக்கி மாட்ட வேண்டாம். எரியாத பல்புகளை மாற்றி விடவும்.

தொழில் ஸ்திரத்தன்மை, கல்வி வளர்ச்சி, நல்ல மன ஆரோக்கியம், சிறந்த உறவுகள் மற்றும் பல போன்ற பல்வேறு நன்மைகளை வாஸ்து நம் வாழ்வில் கொண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளன. இந்த எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை அதிர்வுகளை அதிகரிப்பதை வாஸ்து நோக்கமாகக் கொண்டுள்ளது.