திங்கள், 17 நவம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2025 (17:30 IST)

மலைவாழ் மக்களின் குலதெய்வம் தர்மலிங்கேஸ்வரர்: சித்தரின் அருளுடன் அருளும் கோவில்

மலைவாழ் மக்களின் குலதெய்வம் தர்மலிங்கேஸ்வரர்: சித்தரின் அருளுடன் அருளும் கோவில்
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில், சுற்றுவட்டார மலைவாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. புதுப்பதி, சின்னாம்பதி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான மலைவாழ் மக்கள், தங்கள் ஓய்வு நேரங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்தது.
 
மலையேறும் பாதையின் நடுவில், அடியார்சாமி சித்தர் சன்னதி அமைந்துள்ளது. மலைவாழ் மக்கள் இந்த சன்னதிக்கு வந்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர். தற்போது பல இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற பின்னரும், இவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதை தொடர்கிறார்கள்.
 
மலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பளிப்பது அடியார்சாமிதான் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் குடி கொண்டிருக்கும் மலைகளில் சித்தர்கள் உலா வருவார்கள் என்பது ஐதீகம். 
 
அந்த வகையில், தர்மலிங்கேஸ்வரர் மலையில் அடியார்சாமி சித்தர் சன்னதி இருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. மலையேறும் பக்தர்கள் இவரை வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடியார்சாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
 
Edited by Mahendran