வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (20:46 IST)

கடும் பனியையும் பொருட்படுத்தாமல் திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

tirupathi
கடும் பனியையும் பொருட்படுத்தாமல் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் அதிக பக்தர்கள் வருவார்கள் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புத்தாண்டு நெருங்கி வருவதை அடுத்து பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறித்த நேரத்திற்கு சென்றால் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்து விடும் நிலையில் டோக்கன் பெறாத பக்தர்கள் குடோன்களில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
திருப்பதியில் கூட்டம் அதிகமாகி வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன 
 
Edited by Siva