1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 மே 2023 (22:03 IST)

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் வழியாகச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

mariyamman temple
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் வழியாகச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டிடப் பணி நிறைவு செய்யப்பட்டு ஜூலை  ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனால், ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், இவ்வழியே செல்ல பக்தர்களுக்கு அனுமதி வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்டபம் வழியாக பக்தர்கள் வரிசையில் சென்று, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று, அம்மனை வணங்கிவிட்டு, மூலஸ்தான வி நாயகரை வணங்கி, பின்னர், உற்சவர் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமி வணங்கிய பின் ராஜகோபுரம் வழியே வெளியே செல்ல தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி கூறியுள்ளார்.