செல்வ வளம் நிறைந்து... நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீப வழிபாடு...!!
செல்வ வளம் நிறைந்து... நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீப வழிபாடு...!!
செல்வத்திற்கு அதிபதியான குபேரரை வழிபட வேண்டும். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும்.
குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
வீட்டுவாசலில் இடதுபுறம் குபேர விளக்கை தட்டில் வைத்து, கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரு திரிகளை ஒன்றாக இணைத்து குபேரர் விளக்கு ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைப்பதோடு, குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.