வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (18:43 IST)

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்.. குவிந்த பக்தர்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிலையில் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று
 
அந்த வகையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பதும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசனம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நேற்று தீர்த்த வாரி உற்சவம் நடந்த நிலையில் அங்கு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சன்னதி முன் மண்டபத்தில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran