1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மரகத லிங்க வழிபாடும் அற்புத பலன்களும் !!

மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள்  கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர்  வாக்கு.
 
கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகலிங்கத்தினை வைத்தால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றுவது வியக்கவைக்கும் நிகழ்வாகும். 
 
நீர் நிறைந்த பாத்திரத்தில் மரகதலிங்கத்தினை வைக்கும் பொழுது நீர் முழுவதும் பச்சை நிறமாக மாறுவதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 
 
மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. 
 
மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
 
மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்றும் கூறப்படுகிறது.