திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (11:20 IST)

சப்த தேவியர்களை வழிபட உகந்த ஆஷாட நவராத்திரி !!

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.


வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

முதலாம் நாள் இந்திரா தேவி (ஐந்த்ரி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராகி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி.