அருட்பெரும் ஜோதி வள்ளலாரின் அற்புத பொன்மொழிகள்...!!

Sasikala|
கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். உலகம் உங்களை மதிக்கும். அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு கொண்டவன் தெய்வ இயல்பை  பெறுகிறான்.
தினமும் கடவுளை வணங்காவிட்டால், அருள் உணர்வு இல்லாமல் போகும். ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர். அனைவரும்  சமம்.
 
பசித்தவருக்கு உணவு அளிப்பதோடு தேவையான உதவியும் செய்ய வேண்டும். முற்பிறவியின் புண்ணியத்தால் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதைப் பொறுப்புடன் காப்பது நம் கடமை.
 
கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பமாட்டான். கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான். கடவுளை அறிந்தால் கவலை துன்பம் நேராது. இல்லை என கேட்போருக்கு உதவ வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைபடக்கூடாது.
 
கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்றவேண்டும். நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது. 
 
தானம் கொடுப்பவரை தடுக்கக் கூடாது. எப்போதும் உண்மை பேசுங்கள். நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :