பீஷ்ம ஏகாதசியில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்...!!

lord perumal
Sasikala|
தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை ‘பைலா’ என்று அழைப்பார்கள். முறைப்படி விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் வடுதலை பெறுவார்கள்.
இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்பது பெயராகும். இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். இதுவேதான் ‘பீஷ்ம ஏகாதசி’ என்று கூறப்படுவது. அதாவது பாரத யுத்தத்தில் ‘சரசயனத்தில்’ படுத்திருக்கும்  பீஷ்ம பிதாமகர் சுக்பை ஏகாதசி அன்று தன் உயிரை உடலை விட்டு வேர்பட்ட ஏகாதசியாகும்.
 
ருக்ஷேத்ரத்தில் தான் கண்ணன் சொன்ன பகவத் கீதையும் தோன்றியது, கண்ணன் கேட்ட “விஷ்ணு சஹஸ்ர நாமமும்” தோன்றியது. எனவேதான் குருக்ஷேத்ரம், தர்மக்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. இரண்டும் தோன்றியது ஒரு ஏகாதசியில் தான் !
 
பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது ஸ்ரீ  கிருஷ்ணன் பீஷ்மரை, பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவ்வாறே அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை  செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் ” ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ” என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும்  உபதேசித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :