வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (11:59 IST)

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புத பொன்மொழிகள் !!

யாருடைய பாவங்களெல்லாம்  மறக்கப்படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.


பாபாவே ஒரு மனிதரை அழைத்தாலன்றி அவரருகில் யாருமே செல்ல முடியாது.சீரடிக்கு வருவது,அங்கு தங்குவது,கிளம்புவது அனைத்துமே பாபாவின் விருப்பப்படிதான் நடக்கும்.

என்னுடைய கதைகளை கவனமாக கேளுங்கள். அவைகளைப் பற்றி நினையுங்கள்.எனது  ஆசி இல்லாமல் என்னுடைய  கதைகளை கேட்கும் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.

கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும்.

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.