வெள்ளி, 31 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated: புதன், 15 மார்ச் 2023 (23:40 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் !

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் மார்ச் 22-ஆம் தேதி உகாதி பண்டிகை நடக்கவுள்ளது.

இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்கு முன் செவ்வாய்க்கிழமை  ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.

எனவேர் வரும் மார்ச் 22 ஆம் தேதி உகாதி பண்டிகை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 11 வரை ஆழ்வார் திருமஞ்சனம் அர்ச்சகர்களால் நடத்தப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சி அன்று மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதிஉ அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.