திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (23:09 IST)

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு விஷேச அபிஷேக ஆராதனை

hindu god
கரூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி  உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அருள்மிகு காலபைரவருக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றது.

பால், சந்தனம், இளநீர், கரும்புசாறு, பன்னீர், திருநீர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, கும்ப ஆரத்தி, கோபுர ஆரத்திளும் பின்னர் மஹா தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காலபைரவருக்கு அருள் பெற்றனர்.