புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (19:55 IST)

வாஸ்து தோஷமா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!

வாஸ்து தோஷம் உள்ளவர்கள் உடனடியாக  நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சென்றால் வாஸ்து தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகமாக உள்ளது. 
 
இங்கு உள்ள சனீஸ்வரனை அனுக்கிரக சனி என்று அழைக்கிறார்கள், இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் மற்றும் வாஸ்து தேவசம் நீங்கிவிடும் என்று நம்பிக்கையாக உள்ளது. 
 
சனி தோசத்தை போக்கும் தலமாகவும் வாஸ்து தோஷத்தை போக்கும் தலமாகவும் இந்த தலம் உள்ளது சிறப்பு க்குறியதாகும்.   திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் மயிலாடுதுறையிலிருந்து 32 கிலோ மீட்டர் நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டரில் திருப்புகழூர் உள்ளது என்பதும் இந்த ஊரில் உள்ள தெரு அக்னிஸ்வரர் கோயில்  வாஸ்து தோஷத்தை போக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு பங்குனி உத்திர திருநாளில் சிவனுக்கு விழா எடுப்பது வழக்கமாக உள்ளது.
 
Edited by Mahendran