வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (20:32 IST)

பிள்ளையார்பட்டி விநாயகர் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Pillaiyar
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதும் இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று முதல் கார்த்திகை மாதம் பிறந்து உள்ள நிலையில் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
கார்த்திகை மாதத்தை அடுத்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக மாலை அணிந்து கொண்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு வருவார்கள் என்பதும் அது மட்டுமின்றி தைப்பூசத் திருவிழா நெருங்கி வருவதால் பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க வருவார்கள் என்பதால் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது என கோவில் பரம்பரை அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran