1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன செய்யவேண்டும்...?

தினமும் படுக்கும் முன் 5  முதல் 10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.

தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்து விடும்.
 
படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். 
 
வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய்யை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம். இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம். அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். 
 
கூந்தலானது நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.
 
நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும். 
 
இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, உடலும் ஆரோக்கியம் அடையும். மேலும் டென்சன், தலை வலி, மன அழுத்தம் போன்றவையும் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.