1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் முகப்பரு வந்தால் கையாளவேண்டிய முறைகள் என்ன?

முகத்தில் முகப்பரு வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முகப்பருவில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த முகப்பரு மிகவும் தீவிரமாகக் கூடும்.
 
முகப்பருவை கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த முகப்பருவை சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.
 
அசுத்தமான கையால் முகப்பருவை தொடும் போது, முகப்பருவில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் முகப்பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 
முகப்பருவை கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த முகப்பரு மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
 
முகத்தில் முகப்பருவை வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். முகப்பருவை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.