Daily Horoscope
✕

முட்டை ஓட்டை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க !!

Written By Sasikala
Updated: வியாழன், 25 மார்ச் 2021 (15:39 IST)


முட்டை ஓட்டினை பொடி செய்து  கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். கழுவிய உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். 
 
கற்றாழை ஜெல்லுடன், முட்டை ஓட்டை பொடி செய்து சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு  தினமும் 2 முறை செய்து வந்தால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.
 
ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைத்து கழுவினால், முகத்தில் ஏற்படும் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
 
முட்டை ஓட்டு பொடியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் சாம்பலை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் போட்டு 30 நிமிடம்  ஊறவைத்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
 
முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட முகம் பளிச்சென்று இருக்கும்.
 
2 டீஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் மற்றும் கடலை மாவு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments