முகப்பரு வருவதை தடுப்பதற்கான எளிய இயற்கை அழகு குறிப்புகள் !!
முகத்தில் வரும் பருக்களால் அழகை கெடுப்பதாகவே உள்ளது. இதனால் அவர்கள் தங்கள் சரும அழகு கெடுவதாக நினைகின்றனர்.
முகத்தில் வளரும் பருக்களை நீக்க கண்ட கிரீம்களை உபயோகபடுத்த துவங்கிவிட்டனர். இவற்றால் நிவாரணம் கிடைக்கிறதோ இல்லையோ சரும பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன.
அடிப்படையில் உடலில் கொழுப்புப் பொருள் அதிகமானால் அது வியர்வை மூலமாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் கொழுப்புப் பொருளானது வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும். அந்த கொழுப்பு பொருட்களே பருவாக உருமாறுகின்றன. அது போல முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும்.
பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கிள்ளி விடுகின்றனர். அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.
பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.
பரு உருவாக இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது.