1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

வீட்டில் இருந்தபடியே எளியமுறையில் பேஷியல் செய்ய டிப்ஸ் !!

சிறிய பாத்திரம் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.


பிறகு ஒரு காட்டன் பேட் எடுத்து மேற்சொன்ன கலவையில் நனைத்து முகத்தில் தடவேண்டும். இப்படி முகத்தில் தடவுவதன் மூலம் தோலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் சுத்தமாகவும்,  புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
 
பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
முகத்தை கழுவாமல் சிறிது நேரம் முகத்தில் நீராவி பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும். காரணம், முகத்திற்கு நீராவி பிடிப்பதினால் முகம் மென்மையாகவும், சருமத்தில் உள்ள கருமை அகன்று முகம் பிரகாசமாக இருப்பதுடன் செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
 
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் இதமாக மசாஜ் செய்ய வேண்டும். 10 அல்லது 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவவும். இப்படி செய்வதன் மூலம் சருமம் மென்மையாவதுடன், தோலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
 
பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அற்புதமான பேஸ்பேக் ரெடி! இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.