1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் !!

பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேனிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவச் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். 

ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் தடுக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம்.
 
சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
 
வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமத்தைப் பெறலாம்.
 
கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.
 
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
 
மஞ்சளை பப்பாளியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.