திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தை பராமரிக்க எளிய சில இயற்கை குறிப்புகள்...!!

அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். 


அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
 
1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்  மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெதுவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.
 
1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் போட்டு ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.
 
ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்துங்கள். இந்தக் கலவையை மெதுவாக உங்கள் முகத்தில் தடவி விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர்  வைத்து சுத்தப்படுத்தவும்.
 
1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும். மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை, இந்த முகப்பூச்சை உபயோகிப்பதன் மூலம் உங்களுடைய சருமம் மிகவும் பிரகாசமான ஒளியைப் பெறும்.