புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பாதத்தை அழகாக பராமரிக்க உதவும் சில இயற்கை குறிப்புகள் !!

குளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.

எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில  நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். 
 
பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
 
ஐஸ் பேக் பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்ய கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை பருத்தி துண்டை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது  கட்டியும் வீககமும் குறையும்.
 
வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு பாத அழற்சியை குணப்படுத்த வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.
 
வினிகர் பாத அழற்சியினால் ஏற்பட்ட வலியையும், வீக்கத்தினையும் குறைக்க வினிகர் சிறந்த துணை புரிகிறது. சூடான மற்றும் குளிர்ந்த வினிகரை கலந்து எடுத்து  இப்பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம். நீரையும் வினிகரையும் சம அளவு கலந்து எடுத்து கொண்டு சில நிமிடங்களுக்கு சூடாக்கி பின் ஒரு பருத்தி துணியை  அதனுள் மூழ்க செய்து எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை முடித்த பின் பாதங்களுக்கு ஈரமூட்ட க்ரீம் பயனபடுத்தலாம்.