திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்ய பயன்படும் முல்தானி மெட்டி !!

முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில்  கிடைக்கும். இது போக வெள்ளை, பச்சை, பழுப்பு என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

நம் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த  பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
 
முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும்.

இந்த கலவையை  உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவும். 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு  முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.
 
இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். சரும துவாரங்களின் அடைப்பை நீக்கி, சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை சமநிலைப்படுத்தும். இது பொதுவாக வீட்டில் செய்யப்படும் ஃபேஸ் பேக்காக  பயன்படுத்தப்படுகிறது.
 
புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.