1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்க முடியுமா...?

பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய  செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.

பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.
 
பேஷியலில் பல வகைகள் உள்ளன. பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல்  பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்யவேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின் தேர்வுக்கு  விட்டுவிடலாம்.
 
பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம் கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.
 
பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாய்ண்ட்டுகளில் அழுத்தம் கொடுக்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. பேஷியல் செய்தாலே  நிச்சயமாக ஒரு நல்ல உணர்வை உணர்வார்கள்.