வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (16:19 IST)

கற்றாழையை பயன்படுத்தி நேச்சுரல் ஹேர் ஆயில் எப்படி தயாரிப்பது...?

Aloe vera oil
கற்றாழையில் முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுப்பது மற்றும் வறண்ட உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. இது தலைமுடிக்கு வலிமை மற்றும் ஊட்டச்சத்தை சேர்க்கிறது மற்றும் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் pH சமநிலையை மீட்டெடுக்கிறது.


கற்றாழையில் புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அதுமட்டுமின்றி, கற்றாழை முடியின் வளர்ச்சயைத் தூண்ட, பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பைத் தடுக்கவும் செய்யும்.

நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி தயாரித்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் போதும். தலைமுடி பிரச்சனைகளைத் எளிதில் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்: கற்றாழை - 1 பெரிய இலை, கறிவேப்பிலை - சிறிது, சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது), மிளகு - 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1/4 கப்.

செய்முறை: முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.