வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:58 IST)

எந்த வகை கூந்தலாக இருந்தாலும் பராமரிக்க சிறந்த அரிசி கழுவிய தண்ணீர் !!

Rice Washed Water
தலைமுடியை மென்மையாக்க உதவுகிறது. தலைமுடிக்கு அதிகமான பளபளப்பைத் தருகிறது. தலைமுடியை வலிமையானதாக மாற்றுகிறது. முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர அரிசி தண்ணீர் உதவுகிறது.


இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும்.

சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது.

வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும்.

கூந்தல் எப்பேர்ப்பட்ட வகையில் பொலிவிழந்து காணப்பட்டாலும், அரிசி தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற வைத்துக் குளித்தால் பளபளக்கும். குறிப்பாக கூந்தல் காற்று மாசுபாடு, தூசி, வெப்பத்தால் சேதமடைதல், பொடுகு, வறட்சி, அரிப்பு இப்படி எந்த வகையில் கூந்தல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைச் சரிசெய்துவிடும். கெமிக்கல்களில் இல்லாத மேஜிக் இந்த அரிசி தண்ணீரில் உண்டு.