செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் உள்ள பருக்களை போக்க உதவும் மூலிகைகள் !!

எலுமிச்சை புல்: லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.


அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கும்.
 
வேப்பிலை: வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரணப் பொருள். முக்கியமாக சரும தொற்றுகளால் வரும் முகப்பருக்களைப் போக்குகிறது. அதற்கு வேப்பிலையை  அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து  எடுக்கலாம்.
 
கொய்யா இலை: கொய்யா இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பிறும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும்  முகத்தைக் கழுவ வேண்டும்.
 
வெந்தய கீரை: வெந்தயக் கீரை முகப்பருக்களின் தழும்புகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில்  போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.
 
புதினா: புதினா இலை சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி, சிறந்த டோனர். பிம்பிளைத் தடுக்க உதவுகிறது. அதற்கு புதினா இலைகளை அரைத்து பேஸ்ட்  செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருக்கின்ற இடம்  தெரியாமல் போகும்.